தொலை வியக்கியாக தொலைவில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறாய்....
உனக்கும் எனக்கும் இடையில் இருப்பது காற்றாலை என்பது ஊர கண்ணுக்குத் தெரியும் காதல் அலை என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே புரியும்...
ஆட்டி வைக்கிறாய் ஆடுகிறேன் நான் வாட்டி வதைக்கிறாய் உன் நினைவில் வாழுகிறேன் நான்.....
அணைத்துக் கொண்டிருக்கவில்லை
என்றாலும் உன்னை நினைத்துக் கொண்டிருக்காமல் இல்லை...
துவங்கி வைத்துவிட்டு தூர இருந்து ரசிக்கிறாய்... உனக்கென இயங்குகிறேன் உன்னால் இயங்குகிறேன்..காதலிலே
அருகருகே இல்லாவிட்டால் என்ன சருகாகும் வரை இறகாக நினைவுகள்...இதமாக.....
கடைக்கண் பார்வை வீசி விட்டு கடந்து செல்கிறாய் நீ வைத்த கண் விலகாமல் ரசிக்கிறது இந்த சமூகம் என்னை.....
உயிர் அலை இல்லை என்றால் உனக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை
மின்னலை தானடி உயிர் அலை...
மிகையில்லை இந்த உணர்வலை...
காற்று இல்லாமல் உயிர்கள் இல்லை காதல் இல்லாமல் நாமும் இல்லை
நீ கண் சிமிட்டும் போதெல்லாம்
என் கருவிழிகள் உன் காட்சிக்காக...
தொலைவில் இருந்து இயக்குகிறாய் தொலையாமல் இருக்கட்டும் நம்மிடையே இருக்கும் காதல் துவளாமல் செழிக்கட்டும்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114