காதலில் மைய புள்ளி காமத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை.....
ஈருடல் ஓர் உயிராய் ஒரே புள்ளியில் நிலை கொள்ளும் போது மட்டுமே
காதல் மேலும் செழிக்கிறது
கலவுதலைத் தவிர வேறு ஒரு இழவும் இல்லை காதலில்....
முன் வளைவுகளில் மறைந்து போகிறது பின் விளைவுகள்
களம் தேடி அலைகிறது கூடலில் வளம் இல்லை என்று... உளம் உணர வளம் பெருகும் நலம் கொழிக்கும்
எதிர் எதிர் பாலினம் ஈர்க்கத்தானே செய்யும் எதிரெதிர் காந்த துருவங்களை போல...
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
கலவியின் உச்சமே காதலின் மெய்
ஒப்பிட்டு பார்ப்பதால் தான் துப்பிட்டு போகிறது சப்பை கட்டு காரணம் சொல்லி தறிகெட்டு தெரிகிறது...
வனப்பு இருக்கும் வரை நினைப்பு இருக்கும் நினைப்பு இருக்கும் வரை இனிப்பை சுவைக்கும்...
பிரபஞ்சமே மஞ்சம் தானடா மறுத்தால் பிறப்புக்கு பஞ்சம் தானடா
போட்டு உடைக்கிறேன் என்கிறாயா பூட்டி வைத்தால் வாட்டி வதைக்கும்...
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...வல்லவர்கள்
தேடி கூடிட நல்லவர்கள் யாரும் இல்லை இங்கு...
உள்ளவர்களை கொண்டு உயிரினில் கலந்துவிடு உண்மை காதல் மலரும்... ஊறும் ஊற்றில் வேர் பிடிக்கும்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114