பிள்ளை பிறக்கும் வரை பிள்ளை யாரை எடுத்து வைத்தார்கள்
பிள்ளை பிறந்த பிறகு
பிள்ளையாரை கரைத்து விட்டார்கள்
காரியம் முடிந்தது கைவிடும் மனிதர்கள்.....
ஏரி குளங்களில் இருந்து உயிர்த்தெழுந்தவர் கடலிலே
கரைகிறார்...
பிள்ளையார் யார் பிள்ளை என்ற சண்டையும் இங்கே.. யார் பிள்ளை என்ற சண்டையும் இங்கே...
உன் உருவத்தை பார்க்கும் போதெல்லாம் முதல் உயிர் பலி தான் நினைவுக்கு வருகிறது...
கஜமுகன்...
தொப்பையில் உனக்கு காசு நெற்றியில் எனக்கு காசு இரண்டும் பயனில்லை நமக்கு....
தேவை என்றால் நடு வீட்டில் வைக்கும் தேவை முடிந்ததும் தெருவில் வைக்கும் மானிடன்
கையிருப்புக்கு ஏற்றார் போல கணபதியின் உயரம்..
அடுக்களையில் உறங்கும் பூனை பிள்ளையாரின் தொப்பைக்கு சண்டை...
எங்கும் காணவில்லை எருக்கம் பூவை கருக்கலில் களவாடப்பட்டது.....
மழை நீரில் கரைந்து விடும் களிமண் பொம்மைக்கு காகித குடை..
விளையாட்டுப் பிள்ளைகள் விளையாடும் பொம்மைகள்....
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மதக் கடவுளும் உண்டு... அதே மூன்றாம் நாள் உயிர் துறந்த மத கடவுளும் இங்கே....
நம்பிக்கையின் பெயரில் நகரும் வாழ்க்கை...மனிதனுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும்....
பிள்ளை யார்.. யார் பிள்ளை..
இரண்டும் எல்லை சேரும் ஒரு நாள் அன்று இல்லை...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114