வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்....
அருகாமையில் நீ இல்லை
அற்று போனது
பசியும் தூக்கமும்....
கண்ணீரும் வெந்நீராக உன்னை காணவில்லை என்று....
என்ன வேண்டுதல் விரதம் இருக்கிறாய் என்றாள் அம்மா
எனக்கு வேண்டியது நீ என்று அவளுக்கு எப்படி தெரியும்....
மிஞ்சிய உன் நினைவுகளைக் கொண்டு ஏஞ்சிய நாட்களை கழிக்கின்றேன்....
கல்யாணப் பேச்சு எடுக்கும் போதெல்லாம் மறுக்கிறேன்....
மணமேடை ஏறாமல்
மனவறையில் நீ.....
இரண்டாம் திருமணம் எப்படி சாத்தியம் என் இதயத்தை பொருத்தவரை.....
கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறாய்... கல்லறை வாசம் மிக அருகில்....
வயது முதிர்ந்து கொண்டே போகிறது கண்டித்தாள் அம்மா... உன்னால் மனம் முறிந்து போனது உணராமல்
கண்முன்னே பல மணமகளின் புகைப்படங்கள் ...பதிய மறுத்தது
அகக்கண்ணில் உன் முகம்.....
ஒப்பிட்டு பார்க்க கூட மனமில்லை எனக்கு... நீயாகவே நான் என்பதால்
இருபதில் நிகழாவிட்டால் என்ன அறுபதில் நிகழும் என்று நம்பிக்கையோடு உனக்காக....
மறந்திருப்பாய் மறந்தே இருந்தாலும் பரவாயில்லை மடிந்திருக்க வாய்ப்பே இல்லை எனக்குள்ளே துடித்துக் கொண்டிருக்கிறது உன் உயிர்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114