முதலில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று அமைவதில் இருக்கிறது நாம் முதல்வரை அமைப்பது.....
ஊழலை ஒழிப்பது சுலபம்
சூழலுக்கு ஏற்ப வாழாமல் சுய சிந்தனையுடன் வாழ்வோம்...
நேர்வழியில் இலக்கை அடைவதற்கு எதுவும் தேவையில்லை குறுக்கு வழியில் செல்வதற்கான வழிச் செலவு கையூட்டு....
தலை நிமிர்ந்து நிற்கும் தலைவனால்
மட்டுமே தமிழகம் தலை நிமிரும்... நாற்காலியின் கால்களாய் கருங்காலிகள்.... சுயநலமற்ற சுய சிந்தனை அவசியம்....
பதவிக்கு வருவதை மக்களுக்கு சேவை செய்ய... பறைசாற்றும் எவனுக்கும் ஊதியம் வேண்டாம்....
ஆண்டாண்டு காலம் சம்பாதித்தது போதும் வரும் ஆண்டு ஆளும் காலம்
ஊதியம் இல்லாமல் சேவை செய்யுங்களேன்.... சேதாரம் ஆகாமல் இருக்கட்டும் எங்கள் வாழ்வாதாரம்...
கக்கனும் காமராசரும் கையிருப்பு இல்லாமல் கல்லறை சேர்ந்தவர்கள்
இன்றைய களவாணிகள் கல்லறைகள் பல கோடி....
இளையதலைமுறையே இனியாவது
சிந்திப்போம் .. இனிவரும் தேர்தலை சந்திப்போம்.....
ஒரே நாடு என்ற எண்ணம்....
உண்மையில் இருந்தால் போதும்
வேற்றுமையில் ஒற்றுமை
வேதம் ஆக வேண்டும்.....
ஒரே நாடு ஒரே மொழி என்றாய்
விழி பிதுங்கி நிற்கிறது...
விளங்காமல் சமூகம்.....
ஒரே நாடு ஒரே இனம் என்றாய்...
மரபு குலைந்து போனது..ஒரே நாடு
ஒரே கார்டு என்றாய்...உணவு பொருள் தட்டுபாடு...
இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறாய்... தேர்வு செய்யும் இயந்திரம் உன் கையில் என்பதால்....
வடக்கை வளப்படுத்த தெற்க்கை சுரண்டும் உன்னிலை... இருக்கை உனக்கு நிலைப்பதில்லை.. இனியும் உளறல் பயனில்லை...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114