வாய்தாவிற்கு ஒரு வரைமுறை இல்லையா....
இன்று போய் நாளை வா என்பதை போல் என்றும் இங்கே...
பலியானவனின் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொண்டு கொலையாளி இடம் கொடை வாங்கி.. கொண்டாட்டம் போடும் சாமிகள்....
இழுத்துக் கொண்டே போகிறது வழக்கு இளைத்துக் கொண்டே போகிறது என் இருப்பு...
தழைத்துக் கொண்டே இருக்கிறது நீதிமன்றம்
நலிந்து கொண்டே இருக்கிறது
சாட்சிகள்....
தீர்ப்பு வரும் நாளில் தீர்ந்து போனது யாவும்...வழக்கை தள்ளுபடி செய்வது வழிமுறையானது....
வழக்குகள் எதற்கு வழக்காடு மன்றம் எதற்கு....வாதி பிரதிபாதியிடம் பிச்சை எடுத்து பிண்டம் வளர்க்க வா
சட்டம் தன் கடமையைச் செய்யும் சம்பாதித்த பிறகே......நிதியை மெல்லும் பின்பே நீதி வெல்லும்...
குற்றங்கள் இந்த கூத்தாடிகளுக்கு வெல்லம்.....
வாய்தா என்பது வாய் தா...தா என்று வாங்கி வழக்குரைஞரை வாயில் போட்டுக் கொள்வதே.....
மேசையை தட்டி ஓசையை எழுப்பி
கூட்டத்தில் எழும் ஓசையை அடக்க பார்க்கிறாய்.....
உன் செயலை நினைத்துப் பார் ஒரு சத்தத்தை அடைக்க இன்னொரு சத்தம் தேவைப்படுகிறது.....
உங்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க இன்னொரு சட்டம் தேவைப்படுகிறது....
வழக்காடு மன்றங்களின் வாய்தாவை கண்டு... குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம்... நிரபராதிகளுக்கு திண்டாட்டம்...
வாய்தாக்களுக்கு ஒரு வரைமுறை வேண்டும்... வழக்காடும் வருடங்கள் குறைக்கப்பட வேண்டும்..
மேல்முறையீடு என்பது நீதிபதியின் குறைபாடு... களையப்பட வேண்டும்...
நடுவர் மன்றங்களிலேயே நடுநிலை இல்லை...
அடுவர் யாவரும் அடக்கப்படாமல் இல்லை..கேள்வி ஞானம் இ(எ)வருக்கும் இல்லை ....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114