கழுதை படத்தை காணவில்லை கல்லாப்பெட்டியை காணவில்லை
காணும் இடம் எங்கிலும் இந்தப் படம்...
பணம் இல்லா பரி வர்த்தனையில் முதலிடம்...எவனது உழைப்பு....
பன்னாடை பரப்புரை....
நமது உழைப்பை நமது சேமிப்பை
ஊர் மேல் விட்டு உற்பத்தி செய்கிறது.... வட்டி
குறைந்த பட்ச தொகை இருப்பு இல்லை என இருப்பதையும் சுரண்டுகிறது....
பணம் இல்லா பரிவர்த்தனையை தவிர்ப்போம் நாம்....
கையிருப்பு இருக்கிறது களவு போகாமல்...
வங்கியில் வைத்த இருப்பு
சேவை எனும் பெயரில் சேதாரமாகிறது
வைப்பு நிதி எனும் பெயரில் முப்படையும் முன்னே முதலீடு செய்யச் சொல்லி
மூளைச்சலவை செய்கிறது....
காப்பீடு தொகை என்பது இழப்பீடு என்றாலும் அதுவும் என் உழைப்பு....
மண்ணில் போடு பொன்னில் போடு வங்கியில் போடாதே.....
வருத்தத்தில் வாடாதே....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114