மகனே என் அப்பாவிற்கு இருந்த திறமை எனக்கு இல்லை எனக்கு இருக்கும் பொறுமை உனக்கு இல்லை....
வந்தேறிகள் நாம் வந்தவுடன் வற்றி விட்டன ஏரிகள் கூட....
நம் தாய்மொழி நமக்கு பயனில்லை...
தமிழ் மொழி இல்லையேல் நமக்கு வாழ வழி இல்லை....
சாதிகள் இல்லையேல் நம்மால் எதையும் சாதிக்க முடியாது....
மதங்கள் ஒன்றாகி விட்டால் நம்மை மலமாக கூட மதிக்க மாட்டார்கள்....
கூட்டம் கூட்டு மகனே கொள்கை பரப்பு மட்டுமல்ல
கொள்ளையடிக்கவும்....தானடா
உதிரி கட்சிகளை சேர்த்துக்கொண்டு
எதிர்க்கட்சிகளை ஏளனமாக பேசு...
சீதனமாக வரும் நன்கொடைகளுக்காக.....
பொதுமக்கள் முன்னிலையில் நல்லவனாகவே இரு...
அப்போதுதான் தனி மனிதனையும் சுரண்டி தலைவனாக முடியும் உன்னால்....
உலகத்தை நீ பார்க்கிறாயோ இல்லையோ உலகம் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறது...
கலகம் செய்வதே கழகத்தின் கடமையாக இருக்க வேண்டும்...
நீ எண்ணியவை யாவும் பிறருக்கு கண்ணியமாக தோன்ற வேண்டும்...
கருவூலங்கள் மட்டும் எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்...
உன்னை நிலை நிறுத்தவே நானும் விலை போகவே தயாராக இருக்கிறேன் மகனே....
வயோதிகர்களை பார்த்தால் வாரி அணைத்துக் கொள்... முதியவர்கள் தான் உன் முகவரி என்று முகம் சுளிக்காமல் சொல்....
ஏழ்மை நிலையில் வளர்ந்தவன் அல்ல நீ இருந்தாலும் உன் இயலாமையை எப்போதும் வெளிக்காட்டி கொள்ளாதே...
பிறக்கும் போதே பிரம்மன் கொடுத்த சீதனம் என்று சொல்....
வரலாற்றை கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள் எல்லாம் நாம் எழுதிய புரட்டு வரலாற்று தான்... இருந்தாலும் அவ்வப்போது புரட்டிப்பார்....
கடைசியாக எனக்கும் ஒரு ஆசை கடற்கரையில் எனக்கும் இடம் கிடைக்க கண்ணீர் விட்டு அழு.....
களவாடியவன் அனைவரும் கலங்கரை விளக்கமாக அமைந்தால்தான்... அலையான திறளும் இம் மக்கள் நுரையாகவே மறைவார்கள்...
கலவரம் உண்டாக்க கற்றுக்கொள்...
நிலவரம் சரியில்லை என்றால் மட்டுமே நீயும் நானும் உலா வர முடியும்...
என்னைப் போலவே நீ மாணவர்களை விட்டு வைக்காதே...
கருவிற்க் குழவிக்கும்
கழகத்தை அடையாளப்படுத்து....
உன்னை பற்றி கவலை இல்லை எனக்கு உனது மூன்றாம் தலைமுறையும் முதல்வனாக வேண்டும்...
என் மூச்சு அடங்கி போனாலும் நம் பேச்சு அடங்காமல் காற்றுடன் உலவ வேண்டும்...
சேர்த்து வைப்பதல்ல அரசியல் சாணக்கியத்தனம் பிரித்து வைப்பதும் வலை விரித்து வைப்பதும் தானடா......
கழகம் என்பது கருவூலம் தானடா நீயும் கண் திறந்து பாரடா.... மண் தின்றாலும் நம் மரபு இது தானடா....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114