தன்னம்பிக்கை மட்டுமே உந்தன் பலம்... மற்ற நம்பிக்கைகள்
தங்கிடும் உன் புலம்...
நம்பிக்கையை மட்டும் பழிக்காதே உந்தன் கனவுகள் என்றும் பலிக்காதே....
நம்பிக்கை துரோகம் இழைக்காதே நலிவுற்றுப் போவாய் மறக்காதே
பக்கவளமாய் பரிவாரம் இருந்தாலும் ஊற்ற துணை உன் தன்னம்பிக்கை ஒன்றே...
தன்னம்பிக்கை உள்ளவன் தலை குனிந்ததில்லை பிறரை நம்பியவன் தலை குனியாமல் இருந்ததும் இல்லை....
கடவுளை நம்பியவன் களவாடப்படுவான்... கண்டவனை நம்பியவன் காயப்படுவான்
தன்னைத்தான் நம்பியவன்
தழைக்க கூடும்... பிறரை தான் நம்பியவன் பிச்சை எடுக்கக்கூடும்
அவநம்பிக்கை கொண்டால் அவமானம் அடைவாய்... மூடநம்பிக்கை கொண்டால்
மூடனாய் ஆவாய்.....
கண்மூடித்தனமான நம்பிக்கையை என்பது கண்ணிருந்தும் குருடனாய் திரிவது... கண்ணால் கண்டதை நம்புவது காட்சிகள் மாறும் போது வெம்புவது...
அறிவார்ந்த அனுபவம் வாய்க்கும் போது தெளிவான சிந்தனை உனக்குள் தோன்றும்....
எதிர்வினை என்னவென்று உணராத எந்த வினையும் பயனற்றது....
அங்கலாய்ப்பு என்றும் வேண்டாம் அலைச்சல் என்பது அறவே வேண்டாம்....
நம்பிக்கையை மட்டும் விட்டு விடாதே நம்பிக்கையை மட்டும் வீணாக்கி விடாதே....
பிறரை நம்பி வீழ்வதை காட்டிலும் உன்னை நம்பி நீ வாழ்வது மேலானது....
இனியாவது உன்னை நீ நம்புவாய் என்று நம்புகிறேன்...
நாளை மீண்டும் வருகிறேன்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114