நாம் எதிர் கொள்வதை பொறுத்து தான் எல்லாம் அமைகிறது.. ஓட நினைத்தால் விரட்டும்... ஒதுங்கி இருந்தால் மிரட்டும்.....
எதிர்கொள்ள துணிந்தால் இல்லாமல் ஆகும்... எதிர்கொள்ள துணிவு இல்லாதவனை இல்லாமல் ஆக்கும்
நடப்பவை யாவையும் நாம் நடப்பதை பொறுத்தே நம் இருப்பு யாவையும் இருப்பதை பொறுத்தே....
என்றும் எளிமை இல்லை வறுமை என்றும் பெருமை ஒன்றும் வறுமை
பொறுப்பு யாவையும் உன் விருப்பத்தை பொறுத்தே
நெருப்பு என நினைத்தால் வெறுப்பாய் அகத்தே
பெற்றவை யாவையும் உனக்கு பெருமையே.. கற்றதை கற்பித்தல் கற்றலின் வளமையே....
பெற்றவற்றை மற்றவர்க்கே பட்டறிவால் கற்றதனை உற்றவர்க்கே
விதி முடிந்து போன பின்னே விட்டெறியும் வீதியிலே...
சுட்டெரிக்கும் தீயுமது... தீர்ந்திடுமே யாக்கையுடன்... தீராது எந்நாளும்
நீ கற்பித்த யாவுமிங்கே..கரை சேர கூடுமிங்கே....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114