சட்டம் இயற்றுங்கள்
சாதனை விளக்கப் பட்டியலில் சந்திராயன் வரக்கூடாது என்று...
சாதனை விளக்கக் கூட்டங்களையே தள்ளுபடி செய்யுங்கள்...
சோதனை விளக்கக் கூட்டம் கூட்டத் தேவையில்லை வேதனை தனிமனிதனின் குமுறல்கள்...
மகளீரை பொலிவுறச் செய்ய மக்களை நலிவுறச் செய்வது என்ன நியாயம்.....
அடுத்தவனின் விந்துக்கு சொந்தம் கொண்டாடுவது அரசியல்வாதியின் பிழைப்பாக போய்விட்டது....
அறிந்தவனுக்கு வெறுப்பாக அறியாமையில் இருப்பவனுக்கு விருந்தாக படைக்கிறது.....
திரட்டு உண்மையான வரலாற்றை.. புரட்டு உருட்டு திருட்டு வரலாற்றை...
மிரட்டு விரட்டு....
வேட்பாளர்களின் வாக்குறுதிகள் மாறவில்லை....வாக்காளர்களின் தலையெழுத்தும் மாறுவதில்லை....
வளரும் தலைமுறையின் வழிகாட்டிகள் சரியில்லை.... தலைமுறை பிழையில்லை..
தலைநிமிர வழி இல்லை....
ஆட்சியில் அமரும் யாவரும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆட்சியில் அமர வைத்து ஏமார்ந்து கொண்டிருக்கிறோம் நாம்...
சாதனையை விளக்க வேண்டிய அவசியமே இல்லை வேதனையாக சோதனையாக ரோதனையாக அமையாத போது....
சட்டம் கொண்டு வாருங்கள் திட்டம் தீட்டி சுரண்ட வேண்டாம் என்று....
சட்டம் தன் கடமையைச் செய்யும் சமாதியில் புதைந்த பிறகு....
அரசின் வியாதிகளே அரசியல்வாதிகள்... மாற்று மருந்து தேவை.. கூற்று உணர்ந்து வாக்களி
கூரையாவது மிஞ்சட்டும் நீ அறி...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114