நஞ்சை வைத்துக் கொல்லும் நெஞ்சம் படைத்தவன் மனிதன் மட்டுமே....
இரையை காட்டி தனக்கு இரையாக்கிக் கொள்ளும் இயல்பை கொண்டவன் மனிதன் மட்டுமே....
அன்பை காட்டி அடிமையாக்கி ஆதாயம் காண்பவன் ஆறறிவு மனிதன் மட்டுமே....
இறையை காட்டி மனிதனை மனிதன் திண்கிறான்.. இறை நம்பிக்கை காட்டி தனக்கு இரையாக்கி கொள்கிறான்..
சூதுவாது விளங்காத உயிரினங்களை கூட சூழ்ச்சியின் மூலம் சூறையாடுகிறான்...
எதிர்கொள்ள இயலாமல் ஒதுங்கி சென்றால் ஏய்த்து தானே பிழைக்கிறான்
எதிர்த்து நிற்கும் மிருகங்களை கூட
எதிர்க்கத் துணிவின்றி வலையை விரித்து பிடிக்கின்றான்....
அடிமை படுத்தி
வாழும் மனிதனை
அறியாமை அடிமை படுத்தி வாழ்கிறதே
வேட்டையாடும் விலங்குக்கு இருக்கும் வீரம்... சூறையாடும் மனிதனுக்கு இங்கு இல்லையே....
விலங்குகள் எதுவென விளங்கவில்லை எனக்கு... மிருகமும் மனிதனும் ஒன்று என ஆனது...
மிகையான ஆசையினால் ஒன்றை ஒன்று கொன்று தீர்ந்தது
கடவுளில் கலக்கம்
கண் திறந்து பார்த்தால் கையகப்படுத்திக் கொள்வான் இவன் கையகப்படுத்தியும் பயனில்லை விரைவில் கல்லறை கட்டி விடுவான் இவன்
உயிர்த்தெழ எனக்கு மனம் இல்லை.. உயிர் பலி கொடுக்கும் மனிதன் இடையே....உயிர் காக்கும் குணம் எவனுக்கும் இல்லை...
மண்ணுயிர் வாழும் நுண்ணுயிர் யாவையும் தன்னுயிர் என நேசிக்கும் மனம் வரும் நேரம் கல்லான நானும் கண் முன் தோன்றிட கூடும்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114