சிலரின் விமர்சனங்களால் எனக்கு விளங்கியது இன்னமும் அவர்கள் விலங்கெனவே....
தேர்ந்தவர்கள் வழிமொழிய
சார்ந்தவர்கள் சாடிட
சேர்ந்தவர்கள் தேடிட
சோர்ந்தவர்கள் ஓடிட
சொல்வது யாதென உணராமல் சொல்வது யார் என உணர்வதால்
சொல்லில் பயனில்லை.. உள்ளில் உணர்வில்லை....
தத்தி தத்தி நடக்கையில் தவறி விழுந்து விட்டால் தரையை தண்டிக்கும் தாய் தந்தையர்...
பார்த்து நடக்க கற்றுக் கொள்ளாமல் பழி சொல்லும் தரையை பார்த்து... இவ்வழி வளர்ந்தவர்கள் தானே நாம்...
பழி சொல்லியே பழகிப்போனது... பிறரை இழிவாகவே எண்ணத் தோன்றியது.....
விளக்கமான விலை பட்டியல் வேண்டும் விரையம் ஆகும் முன் விளங்கிக் கொள்ள....
உட்பொருள் விளங்காமல்
மேற்கோள் காட்டி விமர்சிக்கிறது.....
எது எப்படியோ வாசிக்க வைத்து யோசிக்க வைத்தது..நாம் சுவாசிக்கும் நம் தாய்மொழி...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114