சுட்டெரிக்கும் வெயிலில் நிற்பதை பார்க்கையில் பாவம் என்று தோன்றுகிறது...
சுரண்டலை நினைத்துப் பார்க்கையில் பாவத்திற்கான பரிகாரம் என்று தோன்றுகிறது...
.திருடனை பிடிக்க திராணியில்லை கருடனைப் போல தணிக்கை நேரம்
கை நிறைய காசு பார்த்து என்ன பயன் கையேந்தி நிற்கும் பிச்சைக்காரனிடம் சில்லறைகள் அதிகம்....
ஊழல் பணத்தில் வளரும் பிள்ளைகள் ஊதாரியாக.... நாட்டு மக்கள் பணத்தில் வளரும் தலைமுறை நாதாரியாக....
கொள்ளையடித்த பணத்தில் கொழிக்கும் குடும்பம் கொள்ளை புறம்.....
பங்கு பிரிப்பதற்குள் சங்கு அறுந்து விடும்... பாம்பின் கால் பாம்பறியும்
சந்தேகத்தோடே சகலமும்....
பிள்ளைகள் நினைத்தால் பெற்றோர்களை திருத்தி விடலாம்
நடுத்தெருவில் பிச்சை எடுப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்....
நாளை பேரப்பிள்ளைகள் காரி துப்பும்
அதிகாரம் இருப்பதனால் ஆணவத்தில் ஆடாதீர்கள்... அடிவாரம் வரும் நேரம்.... அரிதாரம் கலையக்கூடும்.....
லஞ்சம் கொடுத்து பெற்ற பணி வஞ்சம் வைத்து வசூலிக்கிறது
பஞ்சம் பிழைக்க வந்தவனிடமும்
கொஞ்சமும் கருணை தானின்றி.....
பாவம் பார்க்கக் கூடாது சாபம் வந்து சேரும் நமக்கு... கோபம் கூட கொள்ளக்கூடாது.. கொள்ளும் கோபம் கொல்லும் நமையே....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114