உயிர் உடலுக்கு ஆதாரமே தவிர ஆதாயம் அல்ல
உடலின் உருவத்தையும் பருவத்தையும் வைத்து தான் உயிரின் அளவு எடை போடப்படுகிறது...
உயிர் உடலை ஆட்டிப்படைப்பதில்லை உணர்வுகள் மட்டுமே உடலை ஆட்டிப் படைக்கின்றன...
உணவுகளை அடக்க கற்றுக் கொண்டால் உயிரும் உடலுக்குள் அடங்கி இருக்கும்
உணர்வடக்க நாளும் உயிரடக்க கூடும் உடல் முடங்கினாலும் உயிர்த்திருக்கலாகும்
சொத்து பத்து இருக்கும் உடலுக்கு சொந்தமான உயிர் உயிலாக மதிக்கப்படுகிறது...
உயர்வாக துதிக்கப்படுகிறது
ஒன்றும் இல்லாதவன் உடலும் உயிரும் அடிமையாக மிதிக்கப்படுகிறது அகதியாக ஒதுக்கப்படுகிறது
உணர்வலைகளுக்கு காரணம் காட்சிகளும் காலம் மாற்றங்களும் சுரப்பிகள் மட்டுமே...
புற உணர்வற்றுக்கிட
அக உணர்வுடன் நலமுடன் வாழு....
உணர்வடக்கி தன் உடலுக்குள் உயிர் அடக்கிய உத்தமர்களே சித்தர்கள்...
சிவனே சீவன்.. சிவனை தனக்குள் அடக்கியவனை எமனும் தீண்டுவதில்லை
எவனாலும் தூண்டப்படுவதும் இல்லை...
உனக்குள் கொழுந்துவிட்டு எரியும் அந்த உணர்வுத்தீயை உனக்குள் அடக்கு..உயிரைத் திரியாக்கு
உணர்வை நெய் ஆக்கு..
உடலை விளக்காக்காக்கு
ஒளிச்சுடர் நீயாகு....
இருள அகற்றி நிலையாகு....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114