நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் புரியாமல் தான் நிலைகுலைந்து போகிறேன் நான்....
அவமதிக்கிறாய் என்று நன்றாக புரிகிறது ஆயினும் அடிமையாக என் மனசு....
உதாசீனப்படுத்தும் போதெல்லாம் உக்கிரம் எனக்குள் உன் மீது உரிமை இருப்பதாகவே...
விலகி நீ செல்கிறாய் இளகி நான் போகிறேன்... நீ தவிர்ப்பதே நான் தவிப்பதற்காகவா...
நீ உதறி போகும் போதெல்லாம் எனக்குள் நான் சிதறி போகிறேன்
நீ ஒதுக்குவதே உன்னை நான் தொடர்வதற்கா... நீ என்னை மறப்பதே நான் உன்னை மறவாமல் இருப்பதற்காகவா..,
கேலியாக பார்க்கிறாய் என்னை கேள்விக்குறியாக பார்க்கிறேன் நான் என்னை....
திரும்பிப் பார்க்காமலே போய் இருக்கலாம் நீ திரும்பி பார்ப்பதை விரும்பி பார்ப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் நான்....
புன்னகைக்காமலே போய் இருக்கலாம் நீ எனக்குள் நான் புகைந்து கொண்டிருக்கிறேன்
கடந்து போகும் தூரத்திற்கு உன் காவலாளியாக நானுன் கருத்தில்....
கூலி இல்லாத வேலியாக.,
பார்த்து பார்த்து ரசிப்பவனை பதற வைப்பதும்... உருகி உருகி காதலித்தவனை உதறிப் போவதும்....
இளமையின் திமிர் என்பதா....
இதயத்தை மட்டும் நேசித்த என் இயலாமையின் துயர் என்பதா...
மெய் தீண்டியிருந்தால் என் காதல் பொய் என்று ஆயிருக்கும்....
உயிரைத் தீண்டிய காதல் இது உடல் புதையும் வரை வாழும் இது..,.
ஒரு நாள் இல்லை ஒரு நாள்... இல்லை ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்ப்பாய் . ஒதுக்கியதை எண்ணி ஓலமிடுவாய்....
காலம் கடந்து போயிருக்கும்.. என் காதல் உன்னை காயப்படுத்தி இருக்கும்... நினைவுகள் எனக்குள் வடுகலாய் நிரந்தரமாக குடியேறும்
அண்மையில் இல்லா உண்மைக்கு காதலும் வன்மையாய் உன்னை தண்டிக்கும்...
தகுதி தராதரம் பார்த்தவளே.. மிகுதியானதடி என் காதல்.. உன்னை மீளா துயரில் ஆழ்த்துமடி...
அகதியாக நீ என்னை ஒதுக்கினாய்
அதிபதியானேன் என் காதலுக்கு
அதீது அல்ல காதலும் தான்..அது
தீது என உணர்த்தியவள் நீயும் தான்...
நினைத்துப் பார்க்கவும் நேரமில்லை என் நிழலும் உன்னை தொடர்வதில்லை...
என் நினைவே உந்தன் நிழலாக... கருப்பு பூனை படையாக காவல் இருக்கும் என் காதலுக்காக....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114