கைப்பேசி
காலத்தில்
கைப்பிரதி
ஊர்வலமா....
மதம் பரப்பும் கைப்பிரதி
கை மாறியதும் கசங்கி போனது
கை பிரதியின் கால்நடை பயணம்
கசங்கி போனது கட்சி பணயம்
நடைபயணம்
எதற்கடா
நேர் வழி நீ நடக்க....
சர்க்கரை நோயா
அக்கறை தானா
அக்கரை பச்சை தான்
இக்கரை எச்சை தான்
இடையும் இச்சை தான்...
பொழுதுபோக்கு நாங்கள் தானா பொற்காலம் நீங்கள் தானா... கற்காலம் தொட்டே நற்க்காலம் பிறக்கும் என்றே
எக்காலமும் நின்று நாங்கள் ஏமாந்தது போதும் இன்றே...
விளையாட்டு பொம்மை நீ வீதியிலே உலா வருகிறாய்...
வாய்ப்பாட்டு பாடி தானே வலம் வந்து
பதம் பதிக்க பார்க்கிறாய்....
புலம் உணர்ந்த
தமிழினத்தின்
பலவீனம் அன்பு ஒன்றே...
அடிமையாக்காது
உனது பரப்புரை
தெளிந்து நீயும் மொழிந்திடு முடிவுரை.......
உழைத்து வாழ பழகு....
உன்னை நீ உணர்ந்து ஒழுகு...
உயர்வுக்கு அதுவே அழகு...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114