பிறந்த நானே மறந்திருப்பேன் என் பிறந்த நாளை....
மறந்த நாளை சிறந்த நாள் என என் பிறந்த நாளை கொண்டாடும் நட்பு உறவுகள்...
நமக்கென துடிக்க ஒரு உயிர் இருந்தால் போதும் நொடித்து போவதில்லை நமக்கான நொடிகள் கூட....
வாழ்த்துச் சொல்பவர்களால் வளர்ந்து கொண்டிருக்கிறேன் நான் வருடந்தோறும் ... அவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..,
அனைவருக்குள்ளும் அடைவது என் அடையாளம்... பிரபஞ்ச உயிர்களே என் பிடிமானம்.....
மானுடம் மட்டுமல்ல மண்ணுயிரும் என்னுயிரே... பிறப்புயிர் யாவருக்கும் இறப்பு உண்டு பிற உயிரில் உறைந்த இவ்வுயிர்க்கு இறப்பில்லை.....
வாழ்கிறேன் உங்களுக்குள்... வாசமாக சுவாசமாக.. வாசிக்கையில் மட்டுமல்ல யோசிக்கையிலும்....
பிறந்தநாள் தெரிந்திருக்கும் மறந்திருக்கும் இறந்த நாள் தெரிவதில்லை மறந்து விட....
இருக்கும் நாள் சிறந்து இருப்போம்
இச்சைகளை திறந்து இருப்போம்
இயற்கையோடு இயைந்திருப்போம்
இறை நாமே மறை ந்திருப்போம்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114