புள்ளிங்கோ புதுசு இல்லிங்கோ... அந்தக் கால பாகவதர் ஸ்டைலுங்கோ புள்ளிங்கோ இது புதுசு இல்லிங்கோ
கிழிஞ்ச துணி போட்டதெல்லாம் வறுமை தானுங்கோ துணிய கிழிச்சு போடறது பெருமை தானுங்கோ...
தாடியோட அலைஞ்சாக்கா சந்நியாசிங்கோ இப்ப தாடி இல்லாம ஏது இங்க சம்சாரிங்கோ....
கணுக் காலு இறுக்கி பிடிச்ச பேண்ட பாருங்கோ நாலு காலு உள்ள போகும் காலம் மாறுங்கோ...
வேட்டையாடி சுட்டு தின்ன காலம் தானுங்கோ.. பார்பிக்யூன்னு
பேரு மட்டும் புதுசு தானுங்கோ
காலமாற்றம் காட்சி சுழற்சி
வந்து தீருங்கோ.. நாகரீகம் என்று சொல்லி நாடகம் ஆடுங்கோ...
கையில் காசு உள்ளவரை ஆட்டம் போடுங்கோ காசு மட்டும் தீர்ந்துவிட்டால் வாட்டம் பாருங்கோ
புள்ளிங்கோ எதுவும் புதுசு இல்லிங்கோ... புள்ளிங்கோ எதுவும் பழசும் இல்லிங்கோ...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114