வடை சுடும் ஆயாவிடம் வாக்கு கேட்கப் போகிறதோ....
மண்ணின் வளம் சுரண்டி ஆயிற்று விண்ணின் வளம்
சுரண்ட போகிறதோ...
காற்றையும் நீரையும் விட்டு வைக்கவில்லை
கானகத்தையும் விட்டு வைக்கவில்லை
நிலாவில் குடியேறும் மனிதனுக்கு நிம்மதி வந்து சேர்ந்திடுமோ நிலவின் நிம்மதி மாய்ந்திடுமோ...
பாதம் பதிந்த இடங்கள் யாவும் தடங்கள் ஆகின்றன
பாதம் தீண்டிய இடங்கள் யாவும் முடங்கி போகின்றன
ஆய்வு செய்கிறான் நிலவை இன்று அங்கும் சென்று கொள்ளையடிக்க....
தங்கும் வசதி வந்து விட்டால் பங்கம் வந்துவிடும் நிலவுக்கும்.... பொங்கும் அழகு நிலவும் கூட பொலிவிழந்து புதைந்து விடும்....
அடிக்கல் நாட்டியது அப்துல்கலாம்
அலப்பறை செய்கிறான் இந்த முலாம்...
மின்னுவதெல்லாம் பொன்னும் அல்ல..எண்ணுவதெல்லாம் நிறைவேறுவதும் அல்ல....
தரித்திரம் இன்று தள்ளி இருந்ததால் சரித்திரம் படைத்தது
சந்திராயன் இன்று...
அறிவியல் விஞ்ஞானிகளின் அரிய சாதனை.....
அறிவே இல்லாதவனின் அறிக்கை சோதனை...
கனிம வளங்களும் சுரண்ட கூடும்.. கவின் நிலவே உன்னை நீ காத்துக் கொள்....
அறிவாளிகள் கால் பதித்தால்
அறிவை வளர்க்கும் கல்விக்கூடங்கள்
மதவாதிகள் கால் பதித்தால்
மடமையான ஆலயங்கள்...
அரசியல்வாதிகள் கால் பதித்தால் அங்கும் வந்துவிடும் மது கடைகள்...
தலைமை வந்து கால் பதித்தால் தரிசாகி போகும் உன் நிலைமை...
மண்ணும் இடம் கொடுத்துவிட்டு புண்ணாகிப் போனதிங்கே...
கல்லறைக் கட்ட இடம் கொடுத்து விட்டு நிதமும் கதறி அழுகிறது கடலலை ......
வானில் கூட அவ்வப்போது வந்து போகிறது விண்கலங்கள்.....
நிலவே நீ உன் நிம்மதியை கெடுத்துக் கொள்ளாதே..... நிரந்தரமாக இடம் கொடுத்து விடாதே....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114