நமது தேவைக்காக நம்மால் தூக்கிப் பிடிக்கப்படும் குடையின் நிழலும் கூட கருப்பாக
தன்னலம் இன்றி வாழ கற்றுக் கொள்ளுங்கள் நன்னலம் என்பது நிலையும் இல்லை....
எதிரிகளை இனங்காணுவதை விட துரோகிகளை
இனம் காண கற்றுக் கொள்ளுங்கள்....
வெற்றிக்கான காரணம் வீரம் என்றாலும் வீரியம் கொடுப்பது என்னவோ துரோகம் மட்டும்தான்....
நீ உடைந்து போவதற்கும் உயர்ந்து நிற்பதற்கும் நீ உதிர்க்கும் வார்த்தைகளே காரணம்......
அணுகுமுறை சரியாக இருந்தால் அடக்குமுறை கூட அன்பின் வழியாக அடிமையாக மாற்றிவிடும்....
வஞ்சம் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சும் வைத்து கொன்றது துரோகிகள் கூட்டம்
என் வழி நடப்பதாக சொல்லும் கூட்டம் என்னை வழி அனுப்பியதை வழி மொழிவதில்லை....
ஆன்மாக்கள் பழிவாங்குவதில்லை
ஆதாரம்... ஆதாயம் கண்டோரே....
காலம் உணர்த்தட்டும் என்று கல்லறை சேர்ந்து விட்டேன்....
காலம் உணர்த்தும் காட்சியோடு யாவும் காயப்படுத்தியவர் யாவரும் காயப்படும் காலம்..
ஆன்மாக்களை சாந்திப்படுத்துவதாக சொல்லி ஆயுள் முழுதும் ஆதாயம் காணும் ஆணவ கூட்டத்திற்கு ஆவணப்படட்டும் என் ஆன்மா...
ஆன்மாக்கள் பலி வாங்குவதும் இல்லை பழி தீர்ப்பதும் இல்லை.. அதன் நிலை அமைதியே தெளிவுடன் அறிவிரே....
என் கல்லறை காண வரும் கூட்டத்திடம் சில்லறை தேடும் இந்த சமூகம்.... சுற்றுலா தளமாகி போனது சுடுகாடுகள் கூட....
உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பதும் உண்மைதான் போலும் கடற்கரையில் கல்லறை....
இறந்த பிறகு ஏதும் இல்லை என்பதை அறிந்து இருக்கும் போது வாழ்வது தீதுமில்லை.....
தேவைக்காக தூக்கிப்பிடிக்காதீர்கள் தேவை முடிந்ததும் தூக்கி எறியாதீர்கள்
தூக்கி எறிந்ததை மீண்டும் தேடினாலும் கிடைக்காது துரோகிகள் மீண்டும் நண்பனாகவும் முடியாது....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114