சாபக்கேட்டுக்கு உட்பட்டு சட்டமும் சாத்திரமும்....
சம பங்கு கேட்கிறது சட்டமும் சாத்திரமும்....
பாமரனை பயமுறுத்தி பார்க்கிறது
பாட ஏறிய பின்னும் அதன் மீது படுத்து விளையாடுகிறது....
கடவுளுக்கு நிகராக கண்டு வந்த மருத்துவன் காலனுக்கு நிகராக இன்றைய அளவில்....
அபராதம் பரிகாரம் இரண்டும் ஒன்றுதான் இதன் அவதாரம் தான் சட்டமும் சாத்திரமும்
விதிப்படி நடக்கிறதாம் விளம்பும் இரண்டும்..விளங்கினால் விளங்கும் நிதியின் பிடியில் நிகழ்கிறது....
பழி பாவத்திற்கு அஞ்சாத இரண்டுமே
வஞ்சகத்தை நெஞ்சகத்தே கொண்டு நஞ்சாக...
கணக்கெடுத்து பாருங்கள் காட்சி படும்... குடும்பத்தில் ஒன்று விளங்காமல் போயிருக்கும் நன்று....
காலம் தான் கூலி கொடுக்கும் இரண்டிற்கும்... கண்டுணந்தும் கையேந்தியபடி...
சட்டமும் சாத்திரமும் சாமானியனுக்கு சாபக்கேடு... இரண்டையும் வீழ்த்தியே சரித்திரம் படைக்கிறேன் இது என் நிலைப்பாடு...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114