ஏன் தேடுவானேன்
ஏன் நாடுவானேன்
ஏன் சாடுவானேன்
பின் வாடுவானேன்
ஆசையில் அடுவானேன்
ஆர்ப்பரித்து அழிவானேன்
அடிமையாய் கூடுவானேன்
ஆதங்கம் அடைவானேன்
அகலக்கால் வைப்பானேன்
ஐயகோ விழுவானேன்
காயப்பட்டு அழுவானேன்
வடுவோடு வதைவானேன்
கண்டதைக் கண்டு சிதை வானேன்
கொண்டதை விட்டு கொள்வானேன்
கொண்டை சூடி குலைவானேன்
மண்டை கனம் உனக்குமேன்
தொண்டர் நிலை பிணக்கு வீண்
வீணான ஆணவமேன்
விரயம் ஆவதுமேன்
வேண்டாத வேலையுமேன்
வேடிக்கை என்றும் வீண்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114