தீர்ந்து போன தமிழினம்....
நடிகனை நாடாள வேண்டி
நாசமான தமிழினம்...
சும்மா இருந்தவனை
சுரண்டி சோரம் போன தமிழினம்...
அம்மா அய்யா என்றழைத்தே
அடிமையான தமிழினம்
தகுதியற்றவனை தலைவனாக்க
தரம் தாழ்ந்த தமிழினம்
வாழ்க ஓழிக கோசமிட்டு
வழுவி போன தமிழினம்
கூத்தாடி கூட்டிய கூட்டம்
காத்தாடி ஆனதை கண்டீர்
நடிகன் ஒருவன் வந்தான் நாடாண்டு நின்றான்..கூடொன்றிய சேடியிடம் கூட்டத்தை தந்தான்
கூடி நின்ற கூட்டமோ சிறகை முறித்தது சிறைப்படுத்தி நசித்தது...
கொண்டவள் கொடுத்தாள்
கை கொண்டவன் கை விரித்தான்
இரு கையும் பிரிந்தது ஓசை மறைந்தது... விரல்கள் முளைத்து விலகிச் சென்றது...
கூட்டத்தை இங்கு காணவில்லை ஏற்றத்தை இன்னும் அடையவில்லை
மாற்றத்தை இன்னும் தேடவில்லை.. தோற்றுவித்தைப் பற்றி கவலை இல்லை
திரையைக் கண்டு இரையாகாதே
விலை போகும் பொருளாகாதே
நிமிர்ந்து நின்று களம் கண்டிடு
நிச்சயம் வாகை திரம் கொண்டிடு
இவண்
ஆற்காடு குமரன்
9789814114