உன் பாதச்சுவடுகள் பதிந்தன கல்வெட்டுகளாக
உன் கரு விழிகளில் காந்தப்புலம்..
படபடத்த உன் இமைகள் பட்டாம்பூச்சியின் சிறகுகள்
பார்த்து ரசித்த எனக்குள் ரசாயன மாற்றம்...
நீ கண்டு எடுப்பாய் என்றே தொலைந்து போகிறேன்
கண்டுகொள்ளாமல் நீ கடந்து போக உன் நினைவினை கொண்டு நடக்கிறேன்
சாய்ந்து கொள்ள உன் தோள்கள் இல்லை துவண்டு போனது என் கால்கள்....
சேர்ந்து அமர்ந்திருந்த இருக்கையும் சோர்ந்திருந்தன உடன் நீ இல்லை
ஏறெடுத்து பார்ப்பதாகவே நினைக்கிறேன் உன் ஏளன பார்வையை உணராமலே....
தனித்து இயங்குகிறாய் நீ தனிமையில் முடங்குகிறேன் நான்...
இணைந்திருக்காவிட்டால் என்ன நினைத்திருப்பேன்...
நீ என்னை மறந்திருப்பதை நான் மறவாதிருப்பேன்..
விழியின் கருவளையங்கள் விவரித்தன பிரிவின் கவலையை
வேண்டுமென்றே தொலைத்தவர்களை மீண்டும் தேடுவது மாண்டு போவதற்கு சமம்
தேவையில்லை என்று வீசியவளை தேவை என்று யோசிப்பது யாசிப்பதற்கு சமம்...
காதல் ஒரு சிலருக்கு வாசகம்
ஒரு சிலருக்கு யாசகம்
ஒரு சிலருக்கே மா தவம்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114