முதல் கோணல் முற்றிலும் கோணல்
நாணலாய் வளைந்து குழைந்து நெளிந்து மண்ணோடு மடிந்து போகும் காதல்...................
விட்டு வந்தது என் தவறு என்பதால் கெட்டுப்போனது காதலும் கூட........
தொலையாத காதலால் தொலைத்த காதலியை தேடினேன்..,........ மாற்றானின் மனைவியாக மருவி......
மணம் வீசிக்கொண்டிருந்தாலும்
மனம் மாறாமல்..........
காதலின் கரு மனம்.....
காலத்தின் கட்டாயம்
காதல் அழிவதில்லை
காலத்திற்கும் மறப்பதில்லை
காயங்கள் மாயமானாலும்
வலிக்கிறது வடுக்களை
வருடும் போதெல்லாம்
நெருடும் நினைவுகள்
நெருஞ்சிமுள்ளாய்
நெஞ்சில் குத்தும்..........
வடியும் உதிரத்திலும்
வஞ்சியவள் வதனம்
வாழ்ந்து கொண்டிருப்பது அவளல்லவா
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114