Type Here to Get Search Results !

பற்றாக்குறை

 எரிபொருள் விலையேற்றம் மின்சாரத்தை நோக்கி ஓட்டம்


எரிபொருள் விலை ஏற்றம்... 

தீக்குளிக்க திண்டாட்டம்...


எரிபொருள் விலையேற்றம் 

பல பொருளும் விலை மாற்றம்....


எரிபொருள் விலையேற்றம்

ஏழைகள் வாழ்வு போராட்டம்


எரிபொருள் விலையேற்றம்

சரிந்திடும்‌ சதிராட்டம்


எரிபொருள் விலையேற்றம்

மின் தகன எரிமேடை


எரிபொருள் விலையேற்றம்

நடைபாதையில் பெரும் கூட்டம்


எரிபொருள் விலையேற்றம்

எங்கும் தடுமாற்றம்


எரிபொருள் விலையேற்றம்

மின்சாரத் தோடு சஞ்சாரம்


எரிபொருள் விலையேற்றம்

கைப்பொருள் களவாடும்


எரிபொருள் விலையேற்றம்

என்று தீரும் திண்டாட்டம்


எரிபொருள் விலையேற்றம்

வாகனங்கள் மாற்றம்


எரிபொருள் விலையேற்றம்

பயணங்களில் தேக்கம்


எரிபொருள் விலையேற்றம்

பச்சைக்காய்கறிகள் உண்போம் பாதங்களால் பயணிப்போம்


வேதங்கள் எல்லாம் தீரும் 

வாதங்கள் எல்லாம் ஓடும்

ஆரோக்கியமும் சீராகும் 

ஆயுளும் கூடிப் போகும்.....


எந்த மாற்றம் வந்தால்என்ன நம்முள் மாற்றம் காண்போம் வா.....

கைகோர்த்து நடப்போம் வா அரசின் முகத்தில் கரியை பூசுவோம் வா...


மூலப்பொருள் விலை சரிவு

மூளையற்றவனால் பெரும் இழிவு

வரி வாங்கி வயிற்றை வளர்க்கும் வல்லரசு நாடு இது......


சட்டையில்லா காந்திக்கு சத்திய சோதனை இது சந்தி சிரிக்கிறது


உலை வைக்க உணவு தரும் 

உடை இல்லா உழவனுக்கு

உதவாத அரசு இது......


சட்டமன்றம் தேவையா நட்ட நடு ரோட்டில் நாங்கள்..... பட்டபாடு கொஞ்சமல்ல உங்கள் திட்டங்களால்

உங்கள் சட்டங்களால்....


எதற்கும் பயன் இல்லை எதற்கும் பலனில்லை... குதர்க்கம் பேசவில்லை நான்.... குற்றவாளி நாங்கள் என்பதால்


குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

சுற்றம் கூட முற்றும் இங்கே

பற்றும் இல்லை முற்றம் எங்கே


நம்மை மிதிக்க நினைப்போரை நாம் மிதிப்போம் மிதிவண்டியாக எண்ணி.....

மாற்றம் நம்மில் இருந்து உருவாகட்டும் ஏமாற்றம் அரசு உணரட்டும்....


கடைசி பயணம்தான் நம் கால்களில் இல்லையே இடைப்பட்ட தூரமாவது பாதங்களால் பயணிப்போம்.....


திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது திருடர்கள் அல்ல இவர்கள்...... நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்


இவண்

ஆற்காடு க குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.