பிரகாரத்தைச் சுற்றி
வரம் என பெற்ற பிள்ளையால் மீண்டும் பிரகாரத்தைச் சுற்றி பிச்சை எடுக்கிறேன்.....
கொள்ளி போட பிள்ளை வேண்டும் என்று ஆசைப்பட்டதால்
சோறு போட மறுக்கிறான் இவன்
முந்தானையில் முடிந்து வைத்த என் கணவனையும் சேர்த்து அல்லவா இவனை முன்னுக்கு வர வைத்தேன்
வாழக் கற்றுக் கொடுத்த எனக்கே வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவன் என் மகன்.....
தொப்புள் கொடி உறவின் முன் தாலிக்கொடி உறவை கூட தரம் தாழ்த்தினேன்..இன்று கரம் ஏந்தினேன் ......
மறு வீடு வந்ததும் மனநிலை மாறிப்போகிறது மகளிர்க்கு மட்டும்
புது குடித்தனம் நடத்த வந்த மருமகளோ தனி குடித்தனம் வைத்து விட்டாள்.... மறு வீடு அவளுக்கு மாற்று வீடு எங்களுக்கு...
திருமணத்திற்கு பிறகு புதிய அத்தியாயம்..பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும்..
பிள்ளைகளுக்காகவே பிறப்பெடுத்ததாய் பெற்றோர்கள் யாவரும்...பிறவி தீரும் வரை....
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்...
குரளின் வழியே இன்று வரை பெற்றோர்கள்.....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114