வழிகாட்டியாய் இருந்து
தவறான வழிக்கு அழைத்துச் செல்வதைவிட வடிகாலாக இருந்து விடலாம்....
கடைவழி யார் கையிலும் இல்லை....கடைவழி பயணம் யார் துணையுமில்லை..
இடைவழி நிழல் இணையாக நினைவுகள் துணையாக....
எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்புகள் இருக்கும்
எல்லோருக்குள்ளும்
குமுறல்கள் இருக்கும்
எல்லோருக்குள்ளும்
குறைகள் இருக்கும்
யாரும் யாருடைய குறையையும் தீர்க்க முடிவதில்லை
குறைக்க முடியும்....
மீறி தீர்க்க முற்பட்டால் நாமே தீர்ந்து போவோம்... குறை தீர்ந்து நிறையானவுடன் அவர்கள் நீங்கி செல்லக்கூடும்.... நாம் நிர்மூலமாக கூடும்....
நட்பால் பொருள் இழப்பு நட்பின் பொருள் இழப்பு எல்லாம் நன்றாக உணரக்கூடும்...
இழந்தது ஒரு குறை என்று நாமே
நமக்குள் குமுறல்கள் கூடும்....
அறிவுரையும் ஆறுதலும் சொல்வதோடு நிறுத்திவிடு
அகத்தில் இறுத்திக் கொள்ளாதே...புறத்திலும் அதை சொல்லிவிடாதே....
நட்புக்கான நம்பிக்கை அது ஒன்றுதான்....
முடிந்தவரை நல்வழிப்படுத்து நம்பிக்கை கொடுக்காதே... உன் மீது நம்பிக்கை இருப்பதால் தான்
எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.....
தன்னம்பிக்கை கொடு... வெறும் நம்பிக்கையை விதைத்து விட்டு நீ நகர்ந்து விட்டால்கூட அதுவும் ஒரு தவறாகிப் போகும்....
தன்னம்பிக்கையை விதைத்து விட்டு நகர்ந்து போனாலும்
விழுந்துவிடாமல் வீறுநடை போட கூடும்....
மனிதனின் ஆசாபாசங்களுக்கு மட்டும் அளவே கிடையாது... மேலும் மேலும் என்று கூடிக் கொண்டே போகுமே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை...
யாதும் நாமே என்று நம்மை நாம் உணரும் வரை போதும் என்ற எண்ணம் ஒருபோதும் வராது.....
பணம் பொருள் அன்பு எல்லாவற்றிற்கும் பொருந்தும் இது..பொருத்தம் இது.....
நேரில் காணாத நட்பாக இருந்தாலும் சரி.... வேரில் கலவாத நட்பாக இருந்தாலும் சரி
கலந்துரையாடலில் கவனம் கொள்வோம்.... சலனம் வராதவரை.. விரசம் இல்லை நட்பில்.....
நாசிகள் சுவாசிக்கும் வரை தான் வாசிக்கவும் முடியும் நேசிக்கவும் முடியும்...
பிறரை ரசிக்கவும் முடியும்..
பிறரை புசிக்கவும் முடியும்...
பிறரை நசிக்கவும் முடியும்....
சலித்துக் கொள்ளும் இதே மனம்தான் சகித்துக் கொள்கிறது சில நேரம்....
சகித்துக் கொள் வதையே கொஞ்சம் சுகித்துப் பார் சமரசம் உண்டாகும்....
மனம் மாறுபடும் போதுதான் குணம் வேறுபடுகிறது.... மனதை ஒரு நிலைப்படுத்து...
புன்னகைப் பூ பூக்கும்... உன் இதழ்களில் தேனூறும் நற்சொற்கள் நலமாகும்
நற்செயல்கள் நலமாக்கும்
வழிகாட்டியா இல்லை நான் வடிகாலா எனக்கே தெரியாது.. நான் ஒரு வழிப்போக்கன்....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114