என் இரு கண்களையும் இழந்து விட்டேன்
கண்களா அவை என் கணைகள்.......
எத்தனை பதிவுகள்
எத்தனை கனவுகள்
எத்தனை உணர்வுகள்
அத்தனையும் உண்மைகள்
கிட்டப்பார்வை தூரப்பார்வை என பார்வை மங்கியது
பதிவுகள் பழசானது....
தூசி விழுந்ததும் துடித்த கரங்கள் துவண்டு விழுந்தன
கரங்களால் கண்களை தொடக் கூடாதாமே.....
பாதுகாத்த இமைகளே சிறையானதே
சிறகை விரி காமல்
விழிகள் திறக்காமல்
வழிகளில் தடை
ஊரடங்கு உத்தரவாமே.....
காலத்தின் கோலம்
பாசத்தின் ஓலம்
காலம் சொல்லட்டும் பதில்
காத்திருக்கிறேன் அதில்...
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114