வாசலில் கழட்டி விடுகிறாய்.......
தேவையான செருப்பு என்பதால் தேடுவாய் என்று காத்திருக்கிறேன்.
உன்னை சுமக்க ஆயிரம் காலணிகள் காத்திருக்கலாம்...
நான் சுமந்த
நான் சுவாசித்த பாதங்கள் நீ மட்டுமே........
நீ விட்ட இடத்திலேயே
காத்திருக்கிறேன்.
உன் பாத இதழ் மீண்டும் தீண்ட..
பதிந்த உன்
பாதரேகை
நான் பாடையேறும் வரை எனக்கு
ஆயுள்ரேகை
தேய்ந்து விட்டேன் என்று நினைக்காதே
நான் தேய்ந்த அளவு
நீ என்னுள் பாய்ந்து பதிந்து இருக்கிறாய்....
வேண்டாம் என்று நீ வீசினாலும்.
வீசிக் கொண்டிருக்கும் உன் வாசம் எனக்குள்ளே.....
உனக்கு என்மேல் வேண்டா வெறுப்பு
நான் உனக்கு வேண்டாத செருப்பு
நீதானடி என் இருப்பு....
முதலும் முடிவாய்
உன் பாதங்களை சுமக்கும் பாக்கியம் பெற்ற
சந்தோஷத்தில் சாந்தி அடைகிறது என் மனசு.....
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114