எனக்கு என்னை பிடிக்காமல் போனது உனக்கு என்னை பிடிக்கும் வரை....
நான் எல்லாம் ஒரு ஆளே இல்லை.
நீதான் என்னோட ஆள் என்று நினைக்கும் வரை...
உன்னை காணும் வரை கண்டு கொள்ளவில்லை என்னை நான்....
அழகாக இருக்கும் உன்னை பார்த்து அழகு படுத்திக் கொள்கிறேன் என்னை நானே....
கண்ணாடி முன் நின்றதே இல்லை உன் கண்ணடி படும் வரை
மூர்க்கத்தனம் ஒன்றை ஆண்மை என்று இருந்த எனக்குள் இருக்கும் பெண்மையை வெளிப்படுத்தியவள் நீ....
மென்மை தான் பெண்மை என்று நினைத்திருந்தேன்... உன் பாராமுகத்தின் வன்மை புரியும் வரை
கைப்பிடி இடைக்குள் கட்டுண்டு கிடக்கிறேன் காளை என்று எழுகிறேன்
ஒன்றுமில்லை நான்.. நீ ஒன்றி இருக்கவில்லை என்றால்...
என்றுமே இல்லை நான்...
உனக்குள்ளே ஒன்றிய பின் தான்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114