சாதியைக் கொண்டு சம்பாதிக்க சக மனிதனை உயிருடன் சமாதியில் இறுத்துவது தான் இன்றைய சமூகம்
தரையில் நிகழ்வதை திரையிலும்.. திரையில் நிகழ்த்துவது தரையிலும்...
அரங்கம் அமைத்து அவமானப்படுத்துவதை உணராமல் வெகுமானமாக கைதட்டிக் கொண்டிருக்கிறான் பாமரன்...,
நாடி பிடித்து பார்ப்பதாக நாடகம்
போடுகிறது.. பல்லைப் பிடித்து பதம் பார்க்கிறது... அவமானப்படுத்தி வருமானம் ஈட்டுகிறது
வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டதால் வகுப்பறையிலும் இன்னமும் கலவரம் உள்ள நிலவரம்...
கடவுள் சாதி இரண்டையும் முன்னிறுத்தி சம்பாதித்துக் கொண்டிருக்கிறது...
உனக்கான தேவையை உன்னால்
செய்து கொள்ள முடியாமல் உனக்கான சேவையைச் செய்ய வந்தவனை சாதி சொல்லி பிரித்து வைப்பதும் ஏன்...
உன்னால் சரைத்துக் கொள்ள முடியாது சரைக்க வருபவனை சாதி பிரித்து பார்க்கிறாய்....
உன்னை அழகுபடுத்தி பார்பவனை அழ வைத்து பார்க்கிறாய்.... உன்னை அடிமையாக பார்ப்பவனை தொழுதபடி இருக்கிறாய்...
உனது கழிவறையை சுத்தம் செய்ய வருபவனை இழிவாக பார்க்கிறாய்....
முதலில் உன் பார்வையினை மாற்று உன்னை பார்ப்பவன் பார்வை தன்னால் மாறும்...
மாற்றம் என்பது முன்னில் வருவது அல்ல... உன்னில் வருவது
சரைக்கும்போதெல்லாம் தோன்றும் உன் சங்கை அறுத்து விடலாம் என்று..,
எனக்குள் நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன் சமத்துவம் பிறக்கும் ஒருநாள் என்று.....
உன் உயிரை எடுக்கத் தெரிந்த எனக்கு உன் உயிரை எடுக்க தெரியாதா...
சவர காரனும் சலவை காரனும் இல்லை என்றால்.... அழுக்கடைந்து போய் இருக்கும் அனைத்து சாதியும்.....
சாதியை முன்னிறுத்தியது சம்பாதிக்க... காதலை முன்னிறுத்தியது காசு பார்க்க...
மதத்தை முன்னிறுத்தியது மகசூல் காண... கல்வியை முன்னிறுத்தியது கைதட்டல் வாங்க...
மனிதத்தை முன்னிறுத்த எவனுக்கும் மனமும் இல்லை... முன்னிறுத்தினாலும் அங்கீகரிக்க எவனும் இங்கு மனிதனே இல்லை....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114