ஏய்த்து பிழைத்திட எண்ணாதே உன்னை சாய்த்து மாய்த்திட
ஒருவன் வருவான்....
நேரத்திற்கு ஏற்ப பேரம் பேசிய
காலம் இப்போ மாறி போனது....
செயல்முறை முரண்பாடு
செயலிகள் முனைப்போடு....
மீட்டருக்கு மேல போட்டு குடுங்க சார்
வாயை திறக்க முடியவில்லை
வலைதளத்திற்குள் அடங்கிப் போனது வழி பயணம்.....
வழித்தடம் பற்றி கவலை இல்லை
வலைதளம் காட்டும் வழியினில் குறையும் இல்லை....
உரையாடல் இங்கே குறைந்து போனது... உண்மை இங்கே மறைந்து போனது...
இயந்திரம் நம்மை இயக்கி பார்க்குது
இயல்பு நிலை இழந்து இயந்திரமாய் நம்மை ஆக்கி வைத்தது....
நுகர்வோருக்கு எல்லாம் முன் வாசலையும்... வாகன ஓட்டிகளுக்கு பின் வாசலையும்.. திறந்து வைத்து தினம் இயங்குது....
செயலிகளை மட்டும் முன்னிறுத்தி நம் செயலின் இயலினில் தான் செழிக்குது....
இறகு முளைத்து சிறகு விரித்து பறந்தாலும்.... தரகு வேலை தான் பார்த்து தழைக்குது....
சிந்தித்துப் பார்க்க நேரமில்லை சிறை பட்டு கிடப்பது புரியவில்லை... சந்ததிகள் யாவரும் சந்தியிலே....
சிந்திப்போம் இனியாவது நிந்திக்க படுவதையே....
App என்பது ஆப்பு என.. அறியாமல் அழியுது உழைக்கும் வர்க்கம்... அறிந்ததால் செழிக்குது அதிகார வர்க்கம்...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114