கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று
கைவிலங்காகவே... உன்னை தொடரும் நான் விலங்காகவே...
விட்டு விலகியது விடுதலையாக தான் தோன்றுகிறது.. வில்லங்கம் இன்றி தொடர்கிறது...
அடைபட்டுக் கிடந்த காற்று விடைபெற்றுப் போனதாக...
மூச்சடைத்துப் போகும் தேவையில்லை பேச்சடைத்து நிற்கவும் தேவையில்லை...
சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன்...
சுகமாக என்னை நானே நேசிக்கிறேன்...
காணத் துடிக்கவும் வேண்டாம் கண்டதும் நடிக்கவும் வேண்டாம்.... கையில் புகையும் சிகரெட்டை காலில் போட்டு நசுக்கவும் வேண்டாம்...
கவலைப்படாதே முன்னாள் காதலி என்ற முகவரி எந்நாளும் உனக்கு இருக்காது....
எந்நாளும் இனி நான் காதலித்தால் தானே முன்னாள் காதலி என்ற முகவரி உனக்கு...
பகலிலும் இரவிலும் உன் முகம் கண்டு மறந்து போனதடி..
என் முகம் எனக்கு...
பேயறைந்து போயிருந்தது நீ நிறைந்து இருந்த நேரத்தில்... பொலிவாய் தெளிவாய் இனி நிறைவாய் நான்...
உனக்கென நானும் எனக்கென நீயும் என்று கண்ட கனவுகளை கண்டு கண்ணு உறக்கம் தொலைக்கவும் வேண்டாம்....
நம்மை நாம் மாற்றிக் கொள்ளவும் வேண்டாம் நம்மை நாம் தூற்றிக் கொள்ளவும் வேண்டாம் நம்மை நாம் போற்றி புகழவும் வேண்டாம்....
வீட்டுக்கு பயந்து வீதியில் காத்திருந்து
ஊருக்கு பயந்து ஒதுக்கு புறமாய் மறைந்து...
என் பொன்னான நேரத்தை பெண்ணான உனக்கு வாரி இறைத்து வீணானது போதும் விரையமானது யாவும்....
புரையேற வாய்ப்பே இல்லை நீ புறந்தள்ளியதால்... நிறைவாகும் எந்தன் வாழ்க்கையை நீக்கிச் சென்றதால்....
நான் நானாகவே வாழ்கிறேன்
என் வாழ்க்கை எனக்காகவே அமைந்திடவே..
காதலுக்கு கண் இல்லை என்பதெல்லாம் பொய் காதலிக்கும் போது கண் திறந்து பாருங்கள்....
உன் இதயத்தை காதலிக்கிறாளா இல்லை உன் இருப்பை காதலிக்கிறாளா...
கழற்றி விட்டதற்கு காரணங்கள் தேவையில்லை... நீ கழற்றி விட்டதால் காயங்களும் எனக்கு இல்லை....
என் காதலில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை ஆகையால் எனக்கு ஏமாற்றங்களும் இல்லை....
களவும் கற்று மற காதலையும் கற்று மறக்கிறேன்.. உன்னை மட்டுமே..
உயிர் உள்ளவரை காதலி நீ மட்டுமே...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114