முயன்று கொண்டே இரு
நீயாய் நிறுத்தாதே
நீச்சம்டைகையில் தானாய் நிற்கட்டும்
மூச்சு
முட்டும்போது
முடியட்டும்
உன் முயற்சி......
இயக்கம் இருக்கும் வரை
இயங்குவதற்கு தயக்கம் எதற்கு......?
நாளை நிலையில்லை
வேலையை தள்ளாதே
உடைமை ஏதுமில்லை
கடமை தவறாதே....
நேரம் மட்டும் பேதமில்லை எவனுக்கும்.......
காசைக் கூட கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்
காலத்தை செலவு செய்கையில் விழித்துக் கொள்......
செல்வத்தை மீண்டும் ஈட்டி விடலாம்
சென்ற காலத்தை
செத்தாலும் மீட்ட இயலாது......
இரும்புப் பெட்டியில் பூட்டி வைக்க காலமும் காசும் ஒன்றல்ல......
ஒவ்வொரு நொடியும்
உன் நாடி துடித்து உணர்த்துகிறது......
உழைத்துக்கொண்டே இரு உனக்கான அழைப்பு வரும் வரை
ஓய்ந்து போகும் நாள்
மாய்ந்து போவாய்
மாய்ந்து போனாலும்
பிறர் மறவாத வாழ்க்கை வாழு....
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114