மகளிர் சங்கம் மௌனம் காப்பது ஏன்
பாலியல் வன்கொடுமை தன் பாலினத்திற்கு இல்லையோ.... தான் பெண் பாலினம் இல்லையோ.....
மனித உரிமை ஆணையம் எந்த மயிரிழையின் பின்னே...மதி மயங்கி கிடக்கிறது.... தயங்கி முடங்கியது.....
பாலியல் வன்கொடுமையை சாதி கலவரம் ஆக்கியது மதக் கலவரமாய் உருவெடுத்தது... இனக் கலவரமாய் இன்று வரை....
பிறப்பித்தவள் ஒரு பெண் தானே பிறகு எப்படி பிற பெண்களை பிராண்டிடத் தோன்றும்....
ஆண் என்ற ஆணவமா... அதிகார தோரனையா ... அடக்குமுறை ஒத்திகையா...
மீண்டும் ஒரு பூலான் தேவி... மீள முடியாத இனியுன் ஆவி.. கருவிலே கண்டறிந்து கள்ளிப்பால் புகட்ட வேண்டும்.. காமுகன் இவனை கழுவில் ஏற்ற வேண்டும்.....
கல்லறை பிணத்துடன் கூட
களவிட கூடும் கயவர் கூட்டம்
உள்ளவரை மண்ணில் நாளும்
உயிர்பலி நடந்தே தீரும்....
கருத்துச் சுதந்திரம் கூட கழுத்து நெறிபட்டு போக... ஆயுத கலாச்சாரம்
ஆங்காங்கே முளைக்க கூடும்....
தீவிரமாய் வாதம் செய்கிறேன்...
தீவிரவாதம் என்பார்... தீர வாதம் செய்கிறேன்... தீ...விவாதம் ஆக...
வடக்கோ தெற்க்கோ கிழக்கோ மேற்கோ... வலியுறுத்தியவனுக்கு வலியுணர்த்து.. வலியுணரும் வரை
வலிமையை நிலை நிறுத்து....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114