அலைபேசி அடித்த அலையில்
பொங்கிய கடல்....
தங்கிய புயல்.....
கரையைக் கடக்கும் என காத்திருக்கிறேன்
கரையைக் கடந்ததும் வரும் கண்ணீர் மழை.....
எழுத்தாளனுக்கு
கிடைத்த வரம் வாசகர்
வாசகர் உதிர்க்கும் விமர்சனம் உரம்.....
உரமிட்டவுடன்
விவாதம் வீரியமானது....
பாதிப்பை பதிக்கிறேன்
வாதிப்பை குறைக்கிறேன்
குற்றப்பத்திரிகை
குற்றமே....
குற்றவாளியின் வாதம்...
குற்றம் புரியாமல் குற்றப்பத்திரிகை ஏது.....
வாதம் இன்றி விவாதம் ஏது
சொல்லி அழ யாரும் இல்லை
அள்ளித்தெளிக்கிறேன் கவிதையாய்.......
தலை எழுத்து மட்டும்தான் கிறுக்கலாய் என்
தமிழ் எழுத்துக்கள் கோர்வையாய்.......
எழுத்துக்களுக்கும் என் எண்ணங்களுக்கும் தடைபோட எவரும் உலகில் இல்லை........
எழுதிக்கொண்டே இருக்கிறேன்
என்னுயிர் தீரும் மட்டும்...
எழுதப்படுவேன்
என் உயிர் போன பின்னும்..
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114