திரை விலக்கி எட்டிப் பார்த்தது பிறை நிலவு
தூக்கமின்றி தவிக்கின்ற என்னை...........
விசிறிக்கலைத்தன இலைகள்...
விழி உறங்கவில்லை......
தாலாட்டுப் பாடின தவளைகள்
இதமாய் அழுதது மழை
இன்னும் நான் உறங்கவில்லை......
வெக்கை தெரியவில்லை கச்சையும் நனையவில்லை
இச்சையும் தணியவில்லை
இரவும் கழியவில்லை.....
இமைகளை மூடினேன்
இருக்கிறாள் அவள் தயாராக
காதல் கானல் ஆக
கனவுகள் மெய்யாக.....
உயிரும் மெய்யும் கலந்ததுவே
உறைந்தது மொழியதுவே
நிறைந்த கூடலுடன் நித்திரையும் தொடர்ந்ததுவே
நிலவும் நிம்மதி அடைந்ததுவே.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114