நம்மை உலகுக்கு அறிமுகப்படுத்திய நம் தாய் தந்தைக்கு நன்றி சொல்வதை தவிர வேறு ஒன்றும் பெரிதல்ல.....
அறியும் முகம் அத்தனையுமே அறிமுகம்தான்..உன் முகத்தை கண்டறி
அதுதான் உனக்கு அறிமுகம் அதுதான் உனக்கு அடையாளம்
ஆண்டவன் அறிமுகம் கூட தேவையில்லை உன்னை நீ ஆளும் போது...
ஆண்டவனே உன்னிடம் வந்து அறிமுகப்படுத்திக் கொள்வான்... உன்னை நான் ஆட்டுவிக்க வில்லை என்று......
அறிமுகப் படுத்தி வைக்கிறேன் என்று சொல்லி உன் அடையாளத்தையே அழிக்கும் சமுதாயம் இது.....
கௌரவ படுத்துகிறேன் என்று சொல்லி உன்னிடம் இருப்பதை கையகப்படுத்தும் சமுதாயம் இது....
பிரபலங்களுக்கு உயர் பதவி கொடுத்து
கௌரவ படுத்துவதை எதற்கு... தனது நிறுவனத்தை இன்னும் பிரபல படுத்திக்கொள்ள......
உன்னிடம் இல்லாதது எதுவும் இந்த உலகத்தில் இல்லை......
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை.... எல்லாம் நம் அவயம் மட்டுமே..
ஐவகை நிலங்களும் அடக்கம் நம்முள்
.
குறிஞ்சி
மலையும் மலை சார்ந்த இடமும் உனது சதை கோலங்கள்....
முல்லை
காடும் காடு சார்ந்த இடமும்
உனது ரோமங்கள்
மருதம்
வயலும் வயல் சார்ந்த இடமும்
உனது வயிறும் பிறப்புறுப்பும்
நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும்... உனது உதிரமும் உமிழ்நீர் சுரக்கும் நாவும் கண்ணீர் சுரக்கும் உன் விழிகளும்... வியர்வை உள்பட சுரப்பிகளும்
பாலை
சுரம் சுரம் சார்ந்த இடம்... உனது குரல் குரல் ...ஒலியை கிரகித்துக்கொள்ளும் உனது செவி உனக்குள் எழும் உணர்வுகள்....
என்ன இல்லை உன்னிடம் ஐம்பூதங்களும் இருக்கிறது..... ஒன்பது கோள்களும் இருக்கிறது நவ துவாரங்களாக
இதைவிட இந்த பிரபஞ்சத்தில் அறிமுகம் எதற்கு உனக்கு..... உன் முகத்தை நீர் அறிந்த பிறகு.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114