தென்னை ஓலைக் கூரை யானது
பனையோலை விசிறி ஆனது
வாழையிலை விருந்தானது
வேம்பு இலை மருந்தானது
மாவிலைத் தோரணமானது
மருதாணி சிவப்பானது
செம்பருத்தி சீயக்காய் ஆனது............
மந்தாரை இலை மகத்துவம் கொண்டது....
வெற்றிலை கூட தாம்பூலம் ஆனது...,
விருந்து செரிக்க மருந்தாய் ஆனது......
தழைகள் எல்லாம் உணவானது........
பிழைகள் இன்றி பிறவி எடுத்தது.....
மனிதன் வாழ மரணித்தது
மனிதனுக்காக மரமாய் பிறந்தது.....
வந்ததையெல்லாம் வாயில் போட்டு வாழ்ந்திருக்கும் நன்றி கெட்ட மனிதர் நாம்....
நன்றி மறவாது இருப்போம்
கன்று நடுவோம்
நன்று வாழ்வோம்.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114