யாருக்கும் நான் சொல்லவில்லை இருந்தாலும் காட்டுத்தீயாய் நான் கண்மூடிய செய்தி.......
நான் காண வேண்டும் என்று துடித்த இவர்களெல்லாம் கண்முன்னே ஆனால் காண முடியாமல் நான்.....
வந்தவர்களை வாவென்று வரவழைக்கவும் முடியவில்லை வராதவர்களை ஏன் என்று கேள்வி கேட்கவும் முடியவில்லை....
ஒவ்வொருவரின் இறப்பிற்கும் இரங்கற்பா எழுதுகிறேன் நானே இறந்ததாக எண்ணி..... என் இறப்பிற்கு நான் எழுத முடியாது அல்லவா.....
கணக்கு எடுக்க முடியவில்லை கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூட்டம் தான்.....
வாழும்போது தெரியவில்லை எத்தனை பரிவாரங்கள் எனக்கு இருக்கிறது என்று
காலவிரயம் என்று பலரை காணாமல் இருந்தது எவ்வளவு பெரும்பிழை என்று புரிகிறது
எல்லோரும் என்னை காண வரும்போது என்னால் காண இயலவில்லை
கைகுலுக்கி கட்டித்தழுவ முடியவில்லையே
உன்னால் முடியும் என்று என் மீது நம்பிக்கை வைத்த ஒரு நட்பு உள்ளம் இன்று உயிரிழந்து... அவர் நினைவாக அவருக்கு பதில் சவமாக நானாகி
பாடிய சந்தம் இது....
என் மீது நான் கொள்வது தன்னம்பிக்கை அவர் என் மீது கொண்ட நம்பிக்கை... ஆக்கப்பூர்வமான நம்பிக்கை.... இவனால் இன்னது இயலுமென்று முன்னமே நினைத்தவரன்றோ....
மத வேறுபாடு
அற்றது மரணம்
என் இறுதி ஊர்வலம் எடுத்துக்காட்டு
நேற்று இருந்த நான் இன்று இல்லை இன்று இருப்பவர் நாளை இல்லை
நாளை பிறப்பவரும் நிலை இல்லை
சாதிகள் கூட சவமாகத் தான் இருக்கிறது சாட்சியென் ஊர்வல கூட்டம்... சடங்குகளில் கூட சாதி மத பேதமின்றி...
மதம் சார்ந்த கூடும் கூட்டம் அல்ல இது மனிதம் சார்ந்து கூடிய கூட்டம்... மனிதாபிமானத்தை சேர்ந்த கூட்டம் இது
இருக்கும்போதே தீர்மானித்து விட்டேன் என் இறுதி ஊர்வலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று......
என் மீது நம்பிக்கை வைத்த இவர் மீது நானும் நம்பிக்கையோடு எனக்கென ஓர் இடம் பிடித்து வைப்பார் என்ற நம்பிக்கையோடு.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114