ஊதிய பற்றாக்குறைக்கு போராடும் இந்த ஆசிரியர் சங்கம் ஏன் தன் உரிமைக்காக போராடுவதில்லை.....
கடமையை செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை.....
வகுப்பறை நிறையவில்லை வயிற்றறை நிறைந்தால் போதுமா
அசதியைப் போக்கும் வசதி வாய்ப்புகள் வந்தால் போதுமா...
மரியாதை இல்லை என்று மறியல் செய்திருக்க வேண்டாமா....
சீர்திருத்த வேண்டியாவது சீர்திருத்த பள்ளியாய் மாற்றி இருக்க
வேண்டாமா... சிறை பட்டிருக்க வேண்டாமே....
கல்விமுறை பிழை என்றால் கற்பிப்பதில் நிறை உண்டோ
கல்விக்கு துறை உண்டோ
கண்மூடி உறங்குது இன்றோ...
ஆசிரியர்கள் நினைத்தால் ஆட்சியாளர்களையும் மாற்றி விடலாம் என்ற ஆக்கம் அழிந்தது எப்படி...
அறிஞர்களை உருவாக்கி ஆசிரியர்வர்க்கம் அறிவிலியானது எப்படி.,...
அடித்து திருத்தி
அறிவை புகுத்தி
தெளிவாக்கிய
தெய்வங்கள் எங்கே....
அரசு பள்ளிகள் தான் அரசாங்கத்தின் சிரசு.. பயிலும் மாணவர்கள் தான் நாளைய முரசு...
கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே கற்பிழந்த நிலையில்...கற்பது எங்ஙணம்....கற்ப்பிக்கிறேன் குருவிற்கே இங்ஙனம்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114