Type Here to Get Search Results !

விஸ்வகர்மா யோஜனா திட்டம்

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 18 குலத் தொழில்கள்......

குருக்கள் என்பது குலத்தொழில் இல்லையா.... வேதம் படிப்பவன் மனித குலம் இல்லையா....?

சனாதனம் நிலைநிறுத்த கொண்டுவரப்பட்ட சட்டமா....?
சக மனிதனை பிரித்து வைக்க ஒன்றியம் இட்ட திட்டமா....?

குலத் தொழில்கள் யாவிலும் உடல் உழைப்பு உண்டு.... குலத் தொழில்கள் யாவிலும் குலம் தழைப்பதும் உண்டு.....

குலத் தொழில்களால் கோமான் கொடி உயர்வதும் உண்டு... பிறர் குலம் குலைக்கும் தொழிலன்றோ
தவிர்க்கப்பட்ட குலத்தின் நிலையன்றோ....

ஆலயத்தை விட்டு அகல மறுக்கின்றான்... குலம் கலக்க மறுக்கும் இவன் குலத் தொழில்
நலம் பெற வேண்டாமா.....

ஒரே மதம் ஒரே மொழி ஒரே இனம்
ஒரே நாடு ஒரே தேர்தல்... இவனும் ஒரே குலம்.... மறந்தது ஏனோ மறுத்தது ஏனோ மறைத்ததும் ஏனோ

பிறப்பால் பிரிக்கப்பட்ட குலம்.... ஆயினும் பிண்டத்தை வைத்து பிச்சை எடுப்பதில்லை..

இறப்புக்கு பின்னும் இயலாமையை சுரண்டுவதில்லை.. பிறப்புக்கு பின்னும் பிரிவினையை விதைப்பதில்லை.....

உள்குத்து இல்லாமல் அரசின்
சட்டங்களும் திட்டங்களும் இருப்பதில்லை....

விண்ணப்பிப்போர் யாவரையும் விலக்கி வைக்கும்.. குலத் தொழில் பட்டியலில் குருக்களையும் சேர்க்க சொல்....

அந்தனன் என்பவன் அந்நியன் அல்ல அண்டிப் பிழைப்பவன்... சட்டம் பொதுவானது என்றால் திட்டங்களும் பொதுவானதாக அமைய வேண்டும்

ஒன்றியமே இன்றியமையாத குலத்தொழில் பட்டியலில்... இக்குலமும் மனித குலம் என்றால் சேர்த்து விடு... மிருகக்குலம் என்றால் தீர்த்து விடு...

பிரித்து வைக்கவில்லை நான் உங்களையும் சேர்த்து வைக்கிறேன்
ஏழை அந்தணர் வாழ்வும் ஏற்றம் பெற வேண்டும்.. குலத்தொழிலால் அவர் குலம் ஓங்க வேண்டும்...

இவண்
ஆற்காடு குமரன்
9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.