ஆசிரியர் கைகள் கட்டப்படும் போது.... நீதிமன்ற கதவுகள் தட்டப்படுகிறது
மாணவர் அணி என்பது தடை செய்யப்பட வேண்டும் கட்சிகளில்....
அரசியல் அறிவு அவசியம் தான்
அறிவே இல்லாத அரசியல்வாதிகளின் வழிகாட்டுதலின் கீழ்....
இங்கு அரசியல்வாதிகளின் அவசியம் உணர்த்தப்படுகிறது....
அரசியல் மறைக்கப்படுகிறது....
எங்கள் ஆசிரியர்கள் கண்டிக்கவில்லை என்றால் இன்று நாங்கள் தண்டனை கைதிகள்....
ஆசிரியர்களுக்காக காத்திருந்த பிள்ளைகள் நாங்கள்
மரியாதை மனதில் இருந்தது.....
பிள்ளைகளுக்காக வாசலில் காத்திருக்கும் ஆசிரியர்கள்
மரியாதை என்பது மறந்து போனது..,.
அன்றைய ஆசிரியர் பணி என்பது அறப்பணி... அதற்காக தன்னை அர்ப்பணி.....
இன்றைய ஆசிரியர் பணி என்பது அரைப்பணி
அரைத்ததையே அரைக்கிறது
இனி விடாது சனி......
கல்வி தரம் உயர்ந்து விட்டது புத்தக அளவில்.....
வகுப்பு எடுக்க முடியாத ஆசிரியர்கள் குறிப்பு எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள்....
இதை மட்டும் படித்தால் போதும்.., வரையறுக்கும் வகுப்பு ஆசிரியர்
விதைக்கும் அறிவு இல்லாத விவசாயிகள்....
உரைநூல் வாங்க சொல்லி உத்தரவிடுகிறது.... பாட நூலை மூடி வைக்க...
கல்வித்துறை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.. ஆசிரியர்களின் ஆற்றாமையை நினைவில் கொள்ள வேண்டும்.....
அரசியல்வாதிகளுக்கும் கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும்
ஆசிரியர்களை மதிக்காத ஆண்டவனும் ஆண்டியாவான்...
ஆணவத்தில் போண்டியாவான்....
தொட்டதுக்கெல்லாம் குற்றம் என்றால் கெட்டது எப்படி விலகும்
கற்பித்தலும் ஒரு கற்றலே..
கற்றிட எவரும் முனைவதில்லை கற்பிக்க வேறு வழியும் இல்லை.. கற்றிட நாளும் முடியவில்லை....
நாளைய இளைஞர்கள் கையில் நாடு என்றால் மாணவர்களை நாடு.. மரியாதையை நடு..மதியாதாரை விடு
இவண்
ஆற்காடு குமரன்
9789814114