விளம்பரம் இல்லாதவனுக்கு விருது கிடைக்க வாய்ப்பே இல்லை.....
விருதுகள் கிடைத்தாலும் அதை விளம்பிடவும் இவன் முனைவதில்லை..
எருதுகள் கைகொள்ள விருதுகள் விற்கப்படுகின்றன...
பக்குவப்பட்ட வனுக்கு பட்டயங்கள் கூட ஒரு காட்சி பொருளே....
பசித்திருப்பவனுக்கு பழைய சோறும் பகட்டு உணவும் பசி ஆற்றும் ஒரு உணவே...
ருசித்து புசிப்பதெல்லாம் நசிந்திருக்கையில் வசப்படுவதில்லை.... ரசித்துப் புசிப்பவன் நசிந்து இருக்க வாய்ப்பில்லை.....
பொது தளத்தில் இன்னும் வெளிப்படவில்லை என்றார்கள்..
புரியவில்லை எனக்கு... அகம் புறம் இரண்டும் ஒன்றெனவே அறிகிறேன் நான்...
நாடறிந்து என்ன பயன் என் உயிர் என் கூடு அறியும் வரை தானே.... ஏடு அறிந்து என்ன பயன்... எடுத்துரைக்காத போது வீணே....
வள்ளுவர் அறிந்தாரா தான் வடித்ததை வரும் தலைமுறை படிக்கும் என்று... வள்ளுவன் அறிவாரா தன் புகழ் வானிகர் நிலவும் என்று....
பிறப்பின் கடன் என்பது இருக்கும் வரை சிறப்பித்தலே தவிர வேறு ஒன்றும் இல்லை.....
பொன்னும் பொருளும் புகழும் மண்ணும் எனை திண்ணும் வரையே
எண்ணும் எண்ணம் யாவும் விண்ணும் மண்ணும்
உள வரையே..மின்னும் நிலையே....
ஏன் பிறந்தோம் என்று எண்ணினால் வீண் பிறப்பில்லை வான் பிளப்போம்
மண் விதைவோம் மனதில் விளைவோம்.. மதியில் நிறைவோம்...
புகழ் என்பது ஏதுமில்லை இகழ்வோரின் மறு நிலையே
செல்வம் என்பதும் நிலையே இல்லை செ (சொ)ல்லாமல் போகும் நிலையே எல்லை...
விளம்பரம் தேவையில்லை விளம்பும் அறம் தீதுமில்லை... விளங்கும் யாவும் விளக்கும் வரை விளக்காய்
ஒளிரும் வாழ்வே நிலை......
இவண்
ஆற்காடு குமரன்
9789814114