காதலைப் பற்றி என்ன தெரியும் உனக்கு.... காதலித்துப்பார் காலம் உணர்த்தும் உனக்கு...
நாணயத்தின் ரெண்டு பக்கம் தாண்டா காதல் ஒரு பக்கம் தேய்ந்தாலும் ஒண்ணுத்துக்கும் உதவாது.....
செல்லவும் செல்லாது செல்லரிக்காமல் போகாது,..
காயத்தின் வடு மாறாது காலத்திற்கும் மறையாது....
ஒன்னுக்கு ஒன்னு துணையாக ஒன்றுக்கு ஒன்று இணையாக
உள்ளுக்குள் உருகும் நினைவாக உள்ளது தானடா காதல்.....
ஒருவருக்குள் உறைந்து போனாலும் மண்ணுல மறைந்து போகும் வரை
கண்ணுல கண்ணீர் நிலைக்குமடா
காதல் காலத்தை குலைக்குமடா...
காரணம் அறியாது தோன்றிய காதலின் காரணம் அறியும் நேரம் காணாமல் போகும் தூரம்....
இருவரில் ஒருவரில்
எப்போதும் நிலைக்கும்
இணைந்தாலும் நினைந்தாலும் இயலாமையில் கண்ணீர் சுரக்கும்.....
காலத்தை கடந்து கூடும் காதலும் கள்ளக்காதல் ஆகும்.... உள்ள காதல் என்பது உலகம் அறியும் கள்ளக்காதல் என்பது களமறியும்....
காதலைப் பற்றி என்ன தெரியும் உனக்கு.... காதலித்துப்பார் காலம் உணர்த்தும் உனக்கு...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114